/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மின்வெட்டு: ஆயிரக்கணக்கான வாழைகள் பாதிப்புமின்வெட்டு: ஆயிரக்கணக்கான வாழைகள் பாதிப்பு
மின்வெட்டு: ஆயிரக்கணக்கான வாழைகள் பாதிப்பு
மின்வெட்டு: ஆயிரக்கணக்கான வாழைகள் பாதிப்பு
மின்வெட்டு: ஆயிரக்கணக்கான வாழைகள் பாதிப்பு
ADDED : அக் 04, 2011 01:08 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால், பல்லாயிரக்கணக்கான வாழைகள் தண்ணீர் இல்லாமல் வாடுகின்றன.
இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் கூறினர். மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளுக்கு தினமும் காலை 6 லிருந்து 8 மணி வரை இரண்டு மணி நேரமாக மின்வெட்டு இருந்து வந்தது. அது கடந்த ஒரு வாரமாக மூன்று மணி நேரமாக காலை 9 மணி வரை அதிகரித்துள்ளது. இது தவிர, பகலிலும், இரவிலும் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது.சிறுமுகை பகுதி விவசாயிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில், பல லட்சம் வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மின்மோட்டார் மூலம் கிணறு மற்றும் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பாசனம் செய்யப்படுகிறது. பகலில் ஆறு மணி நேரமும், இரவில் எட்டு மணி நேரமும் விவசாயத்துக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படும். ஆனால், கடந்த ஒருவாரமாக பகலில் இரண்டு மணி நேரமும், இரவில் இரண்டு மணி நேரமும் திரிபேஸ் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இரவில் குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல், நினைத்த நேரத்துக்கு மின்சாரம் வருகிறது. இதனால் விவசாயிகள் இரவு முழுவதும் தூங்காமல் மின்சாரத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தண்ணீர் இல்லாமல் வாழை மரங்கள் காய்ந்து வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால் ஒவ்வொரு விவசாயிகளுக்கு லட்சகணக்கில் நஷ்டம் ஏற்படும். எனவே விவசாயத்துக்கு சீரான மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.


