Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அழைத்தால் உடனே வருவேன்

அழைத்தால் உடனே வருவேன்

அழைத்தால் உடனே வருவேன்

அழைத்தால் உடனே வருவேன்

ADDED : அக் 05, 2011 11:55 PM


Google News
திண்டுக்கல் : ''மக்கள் அழைத்தால் அவர்கள் இருக்கும் இடம் தேடி ஓடி வந்து உதவுவேன்,'' என 31வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் டி.ராஜன் கூறினார்.

திண்டுக்கல் ரவுண்ட்ரோடு புதூர், ரயில்வே காலனியில் அவர் பேசியதாவது: அரசு அளிக்கும் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி பெற்றுத்தரப்படும். கடந்த ஆட்சியில் நல்லத்திட்டங்களை 31வது வார்டுக்கு செய்யவில்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். வார்டை பசுமையாக்க வீட்டிற்கு ஒரு மரம் குழந்தைகள் பெயரில் வைக்கப்படும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த இலவச டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் பயிற்சி மையம் திறக்கப்படும். குழந்தைகள் ஆங்கில வழியில் கல்வி கற்க சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும். நூலகமும் திறக்கப்படும். ஏழை, எளிய குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை பெற்றுத்தரப்படும். படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். தகவல் பலகை அமைக்கப்படும். குடிநீர் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக தீர்க்கப்படும். தெருக்களில் கொசுமருந்து தொடர்ந்து அடிக்கப்படும். மக்கள் குறைகள் கேட்க அலுவலகம், புகார் பெட்டி வைக்கப்படும். குடியிருப்போர் நலச்சங்கம் அமைக்கப்பட்டு, மாதம் ஒரு முறை கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். முதியோர் பென்ஷன், ஜாதி, இருப்பிட, வருமான, ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை, ஊனமுற்றோருக்கு சான்றிதழ் வாங்கி, அரசின் உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மருத்துவ முகாம் நடத்தப்படும். சாக்கடை, ரோடு, தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இலவச பட்டா அமைச்சர் மூலம் வாங்கி தரப்படும். நகராட்சியில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு எனக்கு வாய்ப்பளியுங்கள். மக்கள் அழைத்தால் உடனடியாக ஓடி வந்து உதவுவேன், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us