/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் வாக்குறுதிபாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் வாக்குறுதி
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் வாக்குறுதி
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் வாக்குறுதி
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் வாக்குறுதி
ADDED : அக் 07, 2011 10:59 PM
ராமநாதபுரம் : ''ராமநாதபுரம் நகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்,'' என, தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் பேசினார்.ராமநாதபுரம் எட்டாவது வார்டு தங்கப்பாநகரில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் எதிர்கட்சி அந்தஸ்தையே பெற முடியாதவர்கள், கவுன்சிலர்களாகவும் தலைவராகவும் வந்தால், தமிழக முதல்வர் ஜெ., அறிவித்துள்ள நலத்திட்டங்களை எப்படி மக்களுக்கு வழங்குவார்கள்?.அரசு வழங்கினாலும் இவர்கள் திட்டமிட்டு, மக்களுக்கு கிடைக்காதவகையில் தில்லுமுல்லு செய்தால் மக்கள்தான் ஏமாற்றமடைவர்.
எனவே மக்கள் நன்கு சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். மாநிலத்தில் ஆட்சி செய்பவர்கள் உள்ளாட்சியில் இருந்தால் எளிதில் மக்கள் பிரச்னைகளை தீர்க்க ஏதுவாக இருக்கும்.நான் நகராட்சி தலைவரானால் மூன்று மாதங்களுக்குள், நகராட்சியில் கிடப்பில் உள்ள திட்டங்களை விரைந்து முடிப்பேன். அந்தவகையில் தற்போது கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன். கூட்டுகுடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் மக்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக மூன்று ரூபாய்க்கு தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைதான் உள்ளது. நான் பதவிக்கு வந்தவுடன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வேன், என்றார்.தொகுதி செயலாளர் முருகேசன், இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில், வக்கீல் ஹரிதாஸ், முன்னாள் நகராட்சி தலைவர் ராமமூர்த்தி, எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி சாமிநாதன், வேட்பாளர்கள் சீனிவாசன், வாகாப், நகர் இளைஞரணி கே.வி. மணிகண்டன், கே.எஸ்.மணிகண்டன் உட்பட பலர் சென்றனர்.


