Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் தீவிர பிரச்சாரத்தில் பா.ஜ.,: திண்டாடும் திராவிட கட்சிகள்

கரூரில் தீவிர பிரச்சாரத்தில் பா.ஜ.,: திண்டாடும் திராவிட கட்சிகள்

கரூரில் தீவிர பிரச்சாரத்தில் பா.ஜ.,: திண்டாடும் திராவிட கட்சிகள்

கரூரில் தீவிர பிரச்சாரத்தில் பா.ஜ.,: திண்டாடும் திராவிட கட்சிகள்

ADDED : அக் 12, 2011 11:41 PM


Google News
கரூர்: கரூர் நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து மாநில அளவிலான நிர்வாகிகள் நாள்தோறும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சி வேட்வாளர்கள் தன்னந்தனியாக கட்சி தொண்டர்களுடன் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் பெரு நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க., சார்பில் ரவி, அ.தி.மு.க., சார்பில் செல்வராஜ், காங்., சார்பில் சுப்ரமணியம், பா.ம.க., சார்பில் டானியா, ம.தி.மு.க., சார்பில் பழனிசாமி, தே.மு.தி.க., சார்பில் ராமநாதன், பா.ஜ., சார்பில் கோபிநாத் உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.கடந்த 1967ம் ஆண்டுக்கு பிறகு தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில், வேட்பாளர்கள் தனித்தனியாக உள்ளாட்சி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பிரியும் ஓட்டுக்கள் யாருக்கு சாதகமாக மாறப்போகிறது என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரச்சாரத்தில் வாக்காளர்களை கவர பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பளார்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி ஆகியோர் திருச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்தனர்.இதனால் தி.மு.க., வேட்பாளர் ரவி மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து, மாநில நிர்வாகிகள் மற்றும் நடிகர், நடிகைகள் கரூரில் பிரச்சாரம் செய்ய வாய்பில்லாத நிலை இருந்தது.திருச்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் முடி ந்து விட்டதால், வரும் இரண்டு நாட்களில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தரப்பில் மாநில நிர்வாகிகள் மற்றும் நடிகர், நடிகைகள் பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க., வேட்பாளர் ராமநாதனை ஆதரித்து நிறுவன தலைவர் விஜயகாந்த், காங்., வேட்பாளர் சுப்ரமணியத்தை ஆதரித்து மாநில தலைவர் தங்கபாலு ஆகியோர் மட்டுமே இதுவரை பிரச்சாரம் செய்துள்ளனர்.பா.ம.க., வேட்பாளர் டானியாவை நிறுவன தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்தியமைச்சர் அன்புமணி மற்றும் மாநில தø லவர் மணி உள்ளிட்ட மாநில அளவிலான நிர்வாகிகள் கரூரில் பிரச்சாரம் செய்யவில்லை.இந்நிலையில், கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு பா.ஜ., சார்பில் போட்டியிடும் கோபிநாத்தை ஆதரித்து, முன்னாள் மாநில தலைவர் சி.பி., ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலளார் பழனிவேல் சாமி, மாநில பிரச்சார அணி தலைவர் சரவணன் ஆகியோர் அடுத்தடுத்து கரூரில் பிரச்சாரம் செய்துள்ளனர். இன்று அல்லது நாளை மாநில பா.ஜ., துணை தலைவர் ஹெச்., ராஜாவும், இறுதி நாளில் மாநில பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணனும் பிரச்சாரம் செய்வார்கள் என தெரிகிறது.திராவிட கட்சிகளுக்கு போட்டியாக, கரூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தனித்து போட்டியிடு ம் தேசிய கட்சியான பா.ஜ., சார்பில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை கரூரில் பிரச்சாரம் கூட்டம் நடந்து வருகிறது.அதில், தி.மு.க., அ.தி.மு.க., காங்., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் 'பிரச்சாரத்துக்கு இன்னும் முன்று நாட்களே உள்ள நிலையில் பா.ஜ., சார்பில் முன்வைக்கப்படும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு எந்த வகையில் பதிலடி கொடுப்பது' என தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us