/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல்பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல்
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல்
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல்
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 13, 2011 10:02 PM
பல்லடம் : பல்லடம் பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தப்படும் டிராக்குகளில் இரு
சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், டிரைவர்கள்
பஸ்களை இயக்க சிரமப்படுகின்றனர்.
பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு மதுரை,
திருப்பூர், பொள்ளாச்சி, கோவை என பல இடங்களில் இருந்து தினமும் 650 பஸ்கள்
வந்து செல்கின்றன. இதற்கேற்ப பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்படாமல்
உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் கடை
நடத்துவோரில் சிலர், பயணிகளை இறக்கி விட மற்றும் அழைத்துச் செல்ல
வருபவர்கள் பலர், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை,
டிராக்குகளில் நிறுத்திச் செல்கின்றனர். இதன் காரணமாக, டிராக்குகளில் பஸ்சை
நிறுத்தி, எடுத்துச் செல்ல முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, அரசு போக்குவரத்து அதிகாரிகள், பல்லடம்
போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


