/உள்ளூர் செய்திகள்/சேலம்/முறைகேடாக இணைப்பு: அ.தி.மு.க., பிரமுகர் மீண்டும் அத்துமீறல்முறைகேடாக இணைப்பு: அ.தி.மு.க., பிரமுகர் மீண்டும் அத்துமீறல்
முறைகேடாக இணைப்பு: அ.தி.மு.க., பிரமுகர் மீண்டும் அத்துமீறல்
முறைகேடாக இணைப்பு: அ.தி.மு.க., பிரமுகர் மீண்டும் அத்துமீறல்
முறைகேடாக இணைப்பு: அ.தி.மு.க., பிரமுகர் மீண்டும் அத்துமீறல்
ADDED : ஜூலை 14, 2011 01:34 AM
சேலம்: சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில், நேற்று அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கீதா, மாநகராட்சி அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, முறைகேடான குடிநீர் இணைப்புக்காக குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார்.
சேலம் மாநகராட்சியில் முறைகேடான குடிநீர் இணைப்புகள், மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுதல் ஆகியவற்றால், குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதற்கு தீர்வு காண, நெடுஞ்சாலை துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'குடிநீர் விவகாரத்தில், அ.தி.மு.க., வினரின் தலையீடு இருக்காது' என்று அதிகாரிகளுக்கு உத்தரவாதம் வழங்கினார். மாநகராட்சி அதிகாரிகள் முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மின் மோட்டார் பறிமுதல் ஆகிய நடவடிக்கையில் களம் இறங்கினர். மாவட்ட கலெக்டரும் பிரச்னையில் நேரடியாக தலையிட்டார். அமைச்சர், கலெக்டர், மாநகராட்சி நிர்வாகத்தினர் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கீதா, முறைகேடாக குடிநீர் இணைப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேலம், பழைய சூரமங்கலம் மெயின்ரோட்டில், சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. வீட்டின் மேல் தளத்தில் அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கீதா வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில், சில நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கீதாவுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர், மாநகராட்சியில் அனுமதி பெறாமல், ஜூன் 27ம் தேதி தனது வீட்டுக்கு முன், புதிய குடிநீர் குழாயை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். முறைகேடான இணைப்புக்கு, 70 அடி நீளத்திற்கு குழி தோண்டப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த சூரமங்கலம் ஃபிட்டர் முருகவேலு, அங்கு வந்ததால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் கீதா, பாதியில் விட்டுப்போன பணி தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். மெயின்ரோடு வரை, 100 அடிக்கு மேல் குழி தோண்டி குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் நடராஜனிடம் கேட்ட போது, ''குழாய் பதித்த தகவல் தெரியவில்லை. உரிய விசாரணை மேற்கொண்டு, துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


