/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/களைகளை கட்டுப்படுத்த தெளித்த மருந்தால் கருகிய பல்லாரி பயிர்கள்களைகளை கட்டுப்படுத்த தெளித்த மருந்தால் கருகிய பல்லாரி பயிர்கள்
களைகளை கட்டுப்படுத்த தெளித்த மருந்தால் கருகிய பல்லாரி பயிர்கள்
களைகளை கட்டுப்படுத்த தெளித்த மருந்தால் கருகிய பல்லாரி பயிர்கள்
களைகளை கட்டுப்படுத்த தெளித்த மருந்தால் கருகிய பல்லாரி பயிர்கள்
ADDED : ஜூலை 24, 2011 01:42 AM
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகே பல்லாரி பயிர்களுக்கு களைகளை கட்டுப்படுத்த தெளிக்கப்பட்ட களைக்கொல்லி மருந்தால் பல்லாரி பயிர்கள் கருகியது.பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாரித்தங்கம் (37).
விவசாயி. இவர் தனது வயலில் பல்லாரியும், ஊடுபயிராக மிளகாயும் பயிரிட்டுள்ளனர். பயிர்களுக்கு நடுவே அதிகளவில் புல், செடிகள் போன்ற களைகள் இருந்ததால் களைகளை கட்டுப்படுத்த கீழப்பாவூரில் உள்ள விவசாய பூச்சு மருந்து கடையில் ஸ்ரீகோர் என்ற களைக்கொல்லி மருந்தை வாங்கி தெளித்துள்ளார். ஆனால் மருந்து தெளித்த இரு நாட்களில் பல்லாரி பயிர்கள் கருகிவிட்டது.இதுகுறித்து மாரித்தங்கம் பூச்சிமருந்து கடைக்காரர் மீது பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாரித்தங்கம் கூறுகையில், ''ஒரு ஏக்கரில் பல்லாரி மற்றும் மிளகாய் பயிர் செய்துள்ளேன். களைகளை போக்க நல்ல களைக்கொல்லி மருந்து என்று கடைக்காரர் கூறியதை நம்பி வாங்கி பயிர்களுக்கு தெளித்தேன். ஆனால் பயிர்கள் கருகிவிட்டது. இதனால் எனக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.