/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஒற்றை கொம்பு யானை மீண்டும் வராமல் இருக்க கண்காணிப்புஒற்றை கொம்பு யானை மீண்டும் வராமல் இருக்க கண்காணிப்பு
ஒற்றை கொம்பு யானை மீண்டும் வராமல் இருக்க கண்காணிப்பு
ஒற்றை கொம்பு யானை மீண்டும் வராமல் இருக்க கண்காணிப்பு
ஒற்றை கொம்பு யானை மீண்டும் வராமல் இருக்க கண்காணிப்பு
கூடலூர் : கூடலூர் கோக்கால், சலிவயல் பகுதியில் மக்களை அச்சுறுத்ததி வந்த ஒற்றை கொம்பு யானையை கும்கி யானைகள் உதவியுடன் 6 நாட்கள் போராட்டத்துக்கு பின் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது.கூடலூர் கோக்கால், காமராஜ் நகர், சலிவயல், மேல்கூடலூர் பகுதிக்கு மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கொம்பு யானையை முதுமலையில் உள்ள மூன்று கும்கி யானைகள் உதவியுடன் விரட்டும் பணி கடந்த 18ம் தேதியில் இருந்து வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர்.அந்த யானை போக்குகாட்டி கெவிப்பாறா பகுதிக்கு சென்றது.
5 வது நாளான நேற்று முன்தினம் இந்த யானை இருந்த பகுதியில் மக்னா யானை ஒன்றும் இருந்ததால், யானையை விரட்டுவதில் தொய்வு ஏற்பட்டது.நேற்று அதிகாலை மக்னா யானை சென்ற பிறகு ஒற்றை கொம்பு யானையை விரட்டும் பணி துவங்கியது. கோக்கால் பகுதியில் முகாமிட்டிருந்த இந்த யானையை விரட்ட முதுமலையில் இருந்து 'விஜய்' யானையும் வரவழைக்கப்பட்டது. நான்கு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை விரட்டினர். பல மணி நேர போராட்டத்துக்கு பின், நேற்று மாலையில், சில்வர் கிளவுட் தனியார் தேயிலை தோட்டம், அல்லூர் வழியாக சிங்காரா வனப் பகுதிக்கு ஒற்றை யானை விரட்டப்பட்டது. யானை விரப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மீண்டும் இந்த யானை ஊருக்குள் வராமல் இருக்கவும் கண்காணிப்பு பணி நடக்கிறது.


