/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வங்கிகளுடன் கைகோர்க்கும் தபால் துறைவங்கிகளுடன் கைகோர்க்கும் தபால் துறை
வங்கிகளுடன் கைகோர்க்கும் தபால் துறை
வங்கிகளுடன் கைகோர்க்கும் தபால் துறை
வங்கிகளுடன் கைகோர்க்கும் தபால் துறை
ADDED : ஜூலை 28, 2011 09:10 PM
திருப்பூர் : வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்த, தேசியமயமாக்கப்பட்ட
வங்கிகளுடன் இணைந்து தபால் நிலையங்களில் ஏ.டி.எம்., சென்டர்
துவக்கப்படுகிறது.
உலகம் நவீனமாகி வருவதற்கேற்ப, வங்கி சேவையும்
நவீனமயமாக்கப்பட்டு விட்டன. தனியார் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு 24 மணி
நேர ஏ.டி.எம்., வசதி, டிபாசிட்டுக்கு அதிக வட்டி வழங்கி வாடிக்கையாளரை
கவர்கின்றன.வங்கியில் இருந்து நாளொன்றுக்கு 100 பேர் பணம் எடுத்தால், 50
பேர் டிபாசிட் செய்கின்றனர் என்றால், தபால் நிலையங்களில் இந்த எண்ணிக்கை 10
பேராகவும், அதில் மூன்று பேர் மட்டுமே பணம் டிபாசிட் செய்ய வும்
வருகின்றனர். அதுவும் வங்கி இல்லாத கிராமப்புறங் களில் மட்டுமே. மற்ற
இடங்களில் இதுவும் நடப்பதில்லை. தபால் நிலையங்களுக்கு வரும்
வாடிக்கையாளர்களை கவரவும், சேமிப்பு திட்டத்தை சீரமைக்கவும் தபால் துறை
முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன்
இணைந்து தபால் நிலையங்களில் ஏ.டி.எம்., தொடங்குவது என முடிவு
செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 2,000 தபால் அலுவலகங்களில்
ஏ.டி.எம்., வசதி துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் தலைமை தபால்
நிலையத்தின் கீழ் 63 பெரிய மற்றும் 345 சிறிய தபால் நிலையங்கள் உள்ளன.
அதில், திருப்பூர், தாராபுரம், மேட்டுப்பாளை யம் உள்ளிட்ட பகுதி தபால்
நிலையங்களில் ஏ.டி. எம்., வசதி, வங்கிகளுடன் இணைந்து ஏற்படுத்தப்படும்.
தபால் நிலைய அலுவலர் சம்பத் கூறுகையில்,''வங்கி களுடன் ஒப்பந்தம் செய்து
ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்படும். தபால் நிலையத்தில் டிபாசிட் செய்துள்ள
பணத்தையும், வங்கி ஏ.டி.எம்., வாயிலாக எடுத்துக் கொள்ளக்கூடிய வசதி
உருவாக்கப்படுகிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன; விரைவில்
செயல்பாட்டுக்கு வரும். இந்தியாவில் உள்ள எந்தவொரு ஏ.டி.எம்.,ல் இருந்தும்
கூட, தபால் நிலையத்தில் டிபாசிட் செய்துள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம்,''
என்றார்.


