ADDED : ஆக 03, 2011 01:31 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் சேவை மையம், என்.எல்.எப்.ஓ., சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யப்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த ஆழியாறிலுள்ள 'தாய் அன்பாலயம்' குழந்தைகளுக்கு, மாணவர்கள் சார்பில் 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு கூடுதல் காப்பகம் கட்டுவதற்கு ஹாலோ பிளாக் கற்கள், விளையாட்டு உபகரணங்கள் உட்பட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. இதில், பேராசிரியர்கள், காப்பக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.