ADDED : அக் 07, 2011 10:52 PM
இளையான்குடி : இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் அம்பு விடும் விழா நடந்தது.
இளையான்குடி ஆயிர வைசிய சபை சார்பில் வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்தது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயிலுக்கு முன்பு உள்ள பொட்டலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. நாளை இரவு 10 மணிக்கு ஆயிர வைசிய இளைஞர் அன்புக் குழு சார்பில் புஷ்ப பல்லக்கு மின்சார தீப அலங்காரத்துடன் நடக்கிறது.ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.


