Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மருத்துவக் கல்லூரிகளில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பாடப்பிரிவு : மயில்வாகனன் நடராஜன் பேச்சு

மருத்துவக் கல்லூரிகளில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பாடப்பிரிவு : மயில்வாகனன் நடராஜன் பேச்சு

மருத்துவக் கல்லூரிகளில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பாடப்பிரிவு : மயில்வாகனன் நடராஜன் பேச்சு

மருத்துவக் கல்லூரிகளில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பாடப்பிரிவு : மயில்வாகனன் நடராஜன் பேச்சு

ADDED : அக் 09, 2011 12:30 AM


Google News

மாமல்லபுரம் : 'அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பாடம் கற்பிக்க உத்தரவிட்டுள்ளதாக' தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறினார்.

இந்திய குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாடு துவக்கவிழா, மாமல்லபுரத்தில், இரு நாட்களுக்கு முன், நடந்தது. இதில் மாநாட்டுத் தலைவர் ஆஷ்லி எல்.ஜெ.டி.குரூஸ் பேசியதாவது: 'இந்தியாவில் குழந்தைகள் தொகைக்கு ஏற்ப, 2,200 அறுவை சிகிச்சை நிபுணர்கள் தேவை. ஆனால், மிகவும் குறைவாகவே உள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டில், 128 பேர், மகாராஷ்டிராவில், 158 பேர் மற்றும் கேரளா, கர்நாடகா உட்பட தென்னிந்தியாவில் மட்டுமே அதிகமாக உள்ளனர். பீகார், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முற்றிலும் இல்லை.



குழந்தைகள் மருத்துவ பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க, உலக அளவில், 10 குழந்தைகளுக்கு ஒரு டாக்டர் தேவை உள்ளது. இந்தியாவில், இதன் விகிதம் குறைவாகவே உள்ளது. இவ்வாறு குரூஸ் கூறினார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பேசியதாவது: குழந்தைகள் நல அறுவை சிகிச்சைத் துறையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகத்தானது. இந்தியாவில் இத்துறைக்கான பாடப்பிரிவை சென்னை பல்கலைக் கழகம், முதன் முதலாக, 1968ம் ஆண்டு துவக்கியது பெருமைக்குரியது. இந்திய நிபுணர்களுக்கு உலகளவில் சிறப்பு உள்ளது. நம் நாட்டு மக்கள் தொகையில், 43 சதவீதம் பேர் குழந்தைகள். ஆனால், இத்துறை நிபுணர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகம், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், குழந்தைகள் நல பாடப்பிரிவை கற்பிக்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இத்துறை நிபுணர்கள் மூலம், கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்துறையில் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், குழந்தைகள் நலம் கருதி, ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்யவும், முக்கியத்துவம் அளிக்கவும் வேண்டும். இளம் மருத்துவர்கள், மாணவர்கள் மருத்துவ இதழ்களில் ஏராளமாக எழுத வேண்டும். இதன் முக்கியத்துவம் கருதி, மின்னணு பத்திரிகை துவக்கி உள்ளோம். இவ்வாறு மயில்வாகனன் நடராஜன் கூறினார்.











      Our Apps Available On




      Dinamalar

      Follow us