ADDED : அக் 13, 2011 10:18 PM
கொடைக்கானல் : கொடைக்கானல் நகராட்சி தலைவர் பதவி வேட்பாளர்களாக முகமது இப்ராகிம் (தி.மு.க.,), கோவிந்தன் (அ.தி.மு.க.,) போட்டியிடுகின்றனர்.
தி.மு.க., வுக்கு சாதகமாக ஒரு வாரப் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த செய்தியின் நகலை வினியோகித்து, நேற்று மதியம், மூஞ்சிக்கல் பகுதியில் தி.மு.க., வினர் பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க., வினரும் அங்கு குவிந்தனர். இருவேட்பாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருதரப்பினர் புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


