Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கமிஷனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையா?

கமிஷனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையா?

கமிஷனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையா?

கமிஷனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையா?

ADDED : அக் 12, 2011 08:51 PM


Google News
சென்னை : பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, எடுக்கப்படும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது.

இதை சரிசெய்யும் வகையில், நான்கு நாட்களுக்குள் புகார் குறித்து விசாரிக்காவிட்டால், பொதுமக்கள் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள டெலிபோன் எண் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது, முறையான நட வடிக்கை இல்லாததால், பொதுமக்கள் கமிஷனர் அலுவலகத்தை தேடி வருவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கமிஷனரகம் வாயிலாக செல்லும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது தாமதமாவதாக, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது.'புகார் மீது நடவடிக்கை ஏதும் இல்லை,' என பொதுமக்கள் மீண்டும் கமிஷனரகத்திலேயே புகார் கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள், அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.போலீசார் பற்றாக்குறை: இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''பொதுமக்களின் குறைகளை பெறுவதற்கு, குறைதீர்ப்பு மையத்தில் ஐந்து எழுத்தாளர்கள், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமை காவலர், பெண் உள்ளிட்ட நான்கு காவலர்கள் பணியில் உள்ளனர்.நூற்றுக்கணக்கானவர்கள் புகார் கொடுக்க வரும் நிலையில், அவற்றை பெற்று எழுதுவதற்கு, பணியில் உள்ளவர்கள் போதாத நிலையே உள்ளது. இங்கு பெறப்படும் புகார்கள் மீண்டும் அந்தந்த காவல் நிலையங்களுக்கு தான் அனுப்பப்படுகிறது'' என்றார்.புகார்கள் மீதான நடவடிக்கை தாமதம் குறித்து பேசிய அவர், '' கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ததால், புகார்தாரர் மீது அந்தந்த போலீசாருக்கு வெறுப்பும் ஏற்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் பணி, போலீஸ் பற்றாக்குறை காரணமாக புகார்களை விசாரிக்க தாமதமாகிறது'' என்றார்.இக்குறைகளை களைய, முக்கியமான புகார்களை மட்டுமே கமிஷனரகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் பெற வேண்டும். குறைதீர்ப்பு மையத்துக்கென ஒரு உதவி கமிஷனரை நியமித்து முக்கிய புகார்கள் மீது, அவரின் கீழ் நியமிக்கப்படும் போலீசார் வாயிலாக நடவடிக்கை எடுக்கலாம். இதனால், அந்தந்த காவல் நிலையங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். தேவையற்ற புகார்களும் குறையும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.டெலிபோன் எண் அறிவிப்பு: இந்நிலையில், பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், கமிஷனரக அதிகாரிகளிடத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்த பிறகு, அவர்களுக்கு வழங்கப்படும், 'சிலிப்'பில் தொடர்பு எண் சேர்க்கப்பட்டுள்ளது.இதன்படி, புகாரை பெற்ற பின், நான்கு நாட்களுக்குள் புகார்தாரரை போலீசார் அழைக்க வேண்டும். இதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டுபோலீசார், விசாரணைக்கு அழைக்காத பட்சத்தில், மக்கள் தொடர்பு அதிகாரியை 044-2345 2320 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பொதுமக்களுக்கு வழங்கப்படும் 'சிலிப்'பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us