Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/உப்பிடமங்கலத்தில் டாக்டர் இல்லாததால் குழந்தை இறந்ததாக கூறி மக்கள் முற்றுகை

உப்பிடமங்கலத்தில் டாக்டர் இல்லாததால் குழந்தை இறந்ததாக கூறி மக்கள் முற்றுகை

உப்பிடமங்கலத்தில் டாக்டர் இல்லாததால் குழந்தை இறந்ததாக கூறி மக்கள் முற்றுகை

உப்பிடமங்கலத்தில் டாக்டர் இல்லாததால் குழந்தை இறந்ததாக கூறி மக்கள் முற்றுகை

ADDED : அக் 12, 2011 02:21 AM


Google News
கரூர்: உப்பிட மங்கலம் வட்டார முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணியில் இல்லாததால், குழந்தை இறந்ததாக கூறி பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

பழைய ரங்கம்பாளையம் ப குதியை சேர்ந்த சிவசாமி என்பரவது மனைவி உஷா (22) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு நேற்று முன்தினம் காலை பிரவச வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உப்பிடமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அன்றிரவு 11 மணிக்கு உஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த நர்சுகள், குழந்தையை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கரூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், 'உப்பிடமங்கலத்தில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் பணியில் இருக்க வேண்டிய டாக்டர்கள் இல்லாததால்தான் குழந்தை இறந்தது. சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி நேற்று காலை 11 ம ணி க்கு ஆரம்ப சுகாதார நிலையத் தை முற்றுகையிட்டனர். தகவல் குறிந்த மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசினார். அப்போது, 'உப்பிடமங்கலத்தில் சம்பவம் நடந்த போது பணியில் இல்லாத டாக்டர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காத வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கண்காணிக்கப்படும்' என தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us