/உள்ளூர் செய்திகள்/தேனி/மாநில நிதிக்குழு மான்யம் இல்லை : வரி வசூலிப்பதில் ஊராட்சி நிர்வாகம் முனைப்புமாநில நிதிக்குழு மான்யம் இல்லை : வரி வசூலிப்பதில் ஊராட்சி நிர்வாகம் முனைப்பு
மாநில நிதிக்குழு மான்யம் இல்லை : வரி வசூலிப்பதில் ஊராட்சி நிர்வாகம் முனைப்பு
மாநில நிதிக்குழு மான்யம் இல்லை : வரி வசூலிப்பதில் ஊராட்சி நிர்வாகம் முனைப்பு
மாநில நிதிக்குழு மான்யம் இல்லை : வரி வசூலிப்பதில் ஊராட்சி நிர்வாகம் முனைப்பு
ADDED : ஜூலை 25, 2011 10:28 PM
ஆண்டிபட்டி : மாநில நிதிக்குழு மானியம் கிடைக்கப்பெறாததால் ஊராட்சி நிர்வாகங்கள் வரி வசூலிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன.
ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாநில அரசு மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஊராட்சியில் உள்ள மக்கள் தொகை அடிப்படையிலும், வரி வசூலை அடிப்படையாக வைத்தும் வழங்கப்படும் நிதி கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கு நிதி இல்லாமல் ஊராட்சி நிர்வாகங்கள் சிரமப்படு கின்றனர். ஊராட்சிகளுக்கான பதவிகாலம் அக்டோபரில் முடிகிறது. இதனை காரணம் கூறி பராமரிப்பு பணிகளுக்கு தேவையான பொருட்களை கடனுக்கும் வாங்க முடிவதில்லை. குடிநீர், தெரு விளக்கு, துப்புரவு, சுகாதார பணிகளுக்கு தேவையான பணத்தை வரி வசூலித்து செய்யும் நிலை உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகங்கள் வீட்டு வரி, தொழில் வரி, உரிமைக்கட்டணம் வசூல், குடிநீர் வரி இவைகளில் முனைப்பு காட்டி வருகின்றன.