Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பழைய புத்தகம் அச்சிடும் பணி கண்காணிப்பு :முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சிக்கல்

பழைய புத்தகம் அச்சிடும் பணி கண்காணிப்பு :முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சிக்கல்

பழைய புத்தகம் அச்சிடும் பணி கண்காணிப்பு :முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சிக்கல்

பழைய புத்தகம் அச்சிடும் பணி கண்காணிப்பு :முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சிக்கல்

ADDED : ஜூலை 27, 2011 01:02 AM


Google News
பழைய புத்தகம் அச்சிடும் பணியை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு புது சிக்கல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பழைய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி சென்னை, சிவகாசி மட்டுமல்லாமல் ஐதராபாத், பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் உள்ள அச்சகங்களிலும் துரிதமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை கண்காணிக்க, அந்தந்த பகுதி முதன்மை கல்வி அலுவலர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட கல்வி அலுவலர்களும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். இவர்கள் இதை கவனிக்காமல் வேறு பணிக்கு செல்லக்கூடும் என்பதால், தினமும் அச்சக தொலை பேசி மூலமாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எஸ்.டி.டி., கோடு எண்ணை வைத்து அவர்கள் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டு பிடிக்கும் வகையில், பள்ளிகல்வி துறையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நமது சிறப்பு நிருபர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us