ADDED : ஜூலை 19, 2011 12:43 AM
குன்னூர் : குன்னூர் கரன்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு முகாம், வனத்துறை நர்சரியில் நடத்தப்பட்டது.
குன்னூர் கரன்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், சுற்றுப்புற சூழல் மேம்பாட்டு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர்; தவிர, தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, குடில் அமைத்து, சுற்றுப்புற சூழல் மேம்பாட்டு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கு மரங்கள், வன விலங்குகள், வனங்களின் முக்கியத்துவம், மூலிகை தாவர வளர்ப்பு குறித்து அதிகளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குன்னூர் வண்டிச்சோலையில் உள்ள வனத்துறை நர்சரியில் முகாம் நடத்தப்பட்டது. மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. குன்னூர் ரேஞ்சர் பால்ராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பொன் தன்ராஜ் முன்னிலை வகித்தார். வனத்துறையினர் பங்கேற்றனர். ஆசிரியர் மோகன்குமார் நன்றி கூறினார்.