/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் முதல் மகளிர் தோட்டகலைக்கல்லூரி : "வீடியோ கான்ஃபிரன்ஸ்' மூலம் இன்று ஜெ., திறப்புதிருச்சியில் முதல் மகளிர் தோட்டகலைக்கல்லூரி : "வீடியோ கான்ஃபிரன்ஸ்' மூலம் இன்று ஜெ., திறப்பு
திருச்சியில் முதல் மகளிர் தோட்டகலைக்கல்லூரி : "வீடியோ கான்ஃபிரன்ஸ்' மூலம் இன்று ஜெ., திறப்பு
திருச்சியில் முதல் மகளிர் தோட்டகலைக்கல்லூரி : "வீடியோ கான்ஃபிரன்ஸ்' மூலம் இன்று ஜெ., திறப்பு
திருச்சியில் முதல் மகளிர் தோட்டகலைக்கல்லூரி : "வீடியோ கான்ஃபிரன்ஸ்' மூலம் இன்று ஜெ., திறப்பு
ADDED : ஜூலை 25, 2011 01:55 AM
திருச்சி: தமிழகத்தில் முதல் முறையாக மகளிருக்கென உருவாக்கப்பட்டுள்ள மகளிர் தோட்டகலைக் கல்லூரியை, முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்ஃபிரன்ஸ்' மூலம் இன்று திறந்து வைக்கிறார்.
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 10 வேளாண் கல்லூரிகள் உள்ளன.
இதில், கோவை, தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய ஆகிய இரண்டு வேளாண் கல்லூரிகளில் மட்டும் தோட்டக்கலைக் கல்லூரிகள் (இருபாலர்) செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை தொடர்பான வாழை, வெற்றிலை, மலர்கள் போன்ற பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. எனவே, திருச்சியில் தோட்டக்கலைக்கல்லூரி தனியாக துவங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. குறிப்பாக, மகளிருக்கென தனி கல்லூரி உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
'திருச்சியில் மகளிருக்கென தோட்டக்கலைக் கல்லூரி துவங்கப்படும்' என தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா கூறியிருந்தார். ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். அப்போது 45 ஏக்கர் பரப்பளவில் திருச்சி மகளிர் தோட்டகலைக் கல்லூரி கட்டவும் அடிக்கல் நாட்டினார். 40 கோடி ரூபாயில் அமையவுள்ள இக்கல்லூரிக்கு, நடப்பாண்டு முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்பின் அடுத்த மூன்றாண்டுக்கு தலா 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன்படி, திருச்சி, முத்துக்குளத்தில் உள்ள தமிழக அரசின் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் 45 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி கட்டும் பணி துவங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட 40 இடங்களில் 39 மாணவியர் சேர்ந்துள்ளனர். கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால், வேளாண் கல்லூரியில் மகளிர் கல்லூரி செயல்படும். இந்த கல்லூரி திறப்புவிழா இன்று பகல் 12.30 மணிக்கு நடக்கிறது. சென்னையிலிருந்தபடி தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூ லம் திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரியை திறந்து வைக்கிறார்.
எளிமையாக நடைபெறும் நிகழ்ச்சியில், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், வேளாண் கல்லூரி 'டீன்' ஜெயலபால், ஆர்.டி.ஓ., சங்கீதா மற்றும் அரசு அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.