/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரத்ததான கழகம் அமைப்பேன் பா.ஜ., வேட்பாளர் பேச்சுரத்ததான கழகம் அமைப்பேன் பா.ஜ., வேட்பாளர் பேச்சு
ரத்ததான கழகம் அமைப்பேன் பா.ஜ., வேட்பாளர் பேச்சு
ரத்ததான கழகம் அமைப்பேன் பா.ஜ., வேட்பாளர் பேச்சு
ரத்ததான கழகம் அமைப்பேன் பா.ஜ., வேட்பாளர் பேச்சு
ADDED : அக் 07, 2011 10:22 PM
திண்டுக்கல் : ''அரசியலில் சேவை செய்வதற்காக போட்டியிடுகிறேன்.
பிழைப்பு நடத்துவதற்கு அல்ல,'' என, திண்டுக்கல் நகராட்சி 14 வது வார்டு பா.ஜ., வேட்பாளர் ஜி.தனபால் கூறினார்.திண்டுக்கல் ஓய்.எம். ஆர்.பட்டி, கோபால்நகரில் அவர் பேசியது:வார்டில் ரத்த தான கழகம் ஏற்படுத்தி, அவசர சிகிச்சை காலங்களில் இலவசமாக ரத்தம் பெற்றுத்தர முயற்சி எடுப்பேன். ஒய்.எம்.ஆர்.பட்டி மெயின் ரோட்டில் இருபுறமும் கழிவுநீர் செல்ல, நாராயண அய்யர் திருமண மண்டபம் முன்புறம் பாலம் அமைத்து, கழிவுநீரை திருச்சி ரோடு வழி வெளியேற்ற முயற்சி எடுக்கப்படும். வ.உ.சி.நகர் முதல், இரண்டாவது சந்தில் காயத்திரி பவனம் தொடக்கம் முதல் முடிவு வரை சிமென்ட் சாலைகள் அமைத்துதர முயற்சி மேற்கொள்ளப்படும். வ.உ.சி.நகர் மெயின் ரோட்டில், தார் ரோடு அமைத்து, சாக்கடை பராமரிக்கப்படும். வ.உ.சி.நகரில் அனைத்து குறுக்கு தெருக்களிலும் சிமென்ட் சாலை அமைத்து தரப்படும். கோபால் நகர் விரிவாக்கப் பகுதி மெயின் ரோட்டிலிருந்து வ.உ.சி.நகர், விவோகனந்தா நகர் வரை தார்சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். விவேகானந்தா நகரில் பிளாஸ்டிக் தொட்டி வைத்து குடிநீர் இணைப்பு பெற்றுத்தரப்படும்.கோபால் நகரில், சிலுவத்தூர் ரோட்டில் உள்ள குளத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழை நீர், கோபால் நகர், விரிவாக்கப்பகுதிகளில் உள்ளே புகாதாவாறு அகலமான, ஆழமான கால்வாய் அமைக்கப்படும். அரசின் இலவச திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும். எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் (86082 77005), என்றார்.


