ADDED : ஜூலை 11, 2011 04:13 AM
திருச்சி: திருச்சி, புத்தூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டில்
தரணிபாலன் (45) என்ற நாடிஜோதிடர் கடந்த 10 ஆண்டாக வாடகைக்கு குடியிருந்து
வருகிறார்.
வீட்டை காலி செய்யச்சொல்லியும், தரணிபாலன் வீட்டைக் காலி செய்யாமல்
இழுத்தடித்து வந்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்
உள்ளது.
இந்நிலையில், அய்யப்பன் மகள் திவ்யதேவிக்கும், தரணிபாலனுக்கும் இடையே
நேற்று தகராறு ஏற்பட்டது. இதில், தரணிபாலன் திவ்யதேவியை ஆபாச வார்த்தைகளால்
திட்டியுள்ளார். இதுகுறித்து திவ்யதேவி அளித்த புகாரின் பேரில் உறையூர்
போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


