தலைமை ஆசிரியரின் ரிமாண்ட் நீடிப்பு
தலைமை ஆசிரியரின் ரிமாண்ட் நீடிப்பு
தலைமை ஆசிரியரின் ரிமாண்ட் நீடிப்பு
ADDED : செப் 06, 2011 01:43 AM
மதுரை : மதுரையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், கைதான பொதும்பு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமிக்கு, வீடியோ கான்பரன்சிங் மூலம் ரிமாண்ட் நீடிப்பு செய்து கோர்ட் உத்தரவிட்டது.
பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மீதும், உடந்தையாக இருந்ததாக இரு ஆசிரியர்கள் மீதும் கூடல்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் ஆரோக்கியசாமி செப்., 2ல் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை, செப்.,5 வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். நேற்றுடன் அவரது காவல் தேதி முடிந்தது. இதனால் அவருக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ரிமாண்ட் நீடிப்பு செய்து மாஜிஸ்திரேட் டி.சுஜாதா (பொறுப்பு) உத்தரவிட்டார். அவரை விசாரிக்க வேண்டி போலீஸ் காவலில் விடக்கோரி இன்ஸ்பெக்டர் சூரியகலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


