Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/தலிபான்கள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் காந்தஹர் மேயர் பலி

தலிபான்கள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் காந்தஹர் மேயர் பலி

தலிபான்கள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் காந்தஹர் மேயர் பலி

தலிபான்கள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் காந்தஹர் மேயர் பலி

ADDED : ஜூலை 28, 2011 02:56 AM


Google News
Latest Tamil News
காந்தஹர்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தற்‌கொலைப்படை தாக்குதலில் மாநகராட்சி மேயர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு மாகாணங்களில் மிகப்பெரிய நகரங்களுள் காந்தஹர் நகரமும் ஒன்று இந்நகரி்ன் மேயராக குலாம் ‌ஹைதர் ஹமீதி(65) உள்ளார்.இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவராகஇருந்த போதிலும் அதிபர் ஹமீத் கர்சாயின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய உதவியாளர் ஆவார். இந்நிலையில் நேற்று காந்தஹர் பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புசெய்யப்பட்டிருந்த பகுதிகளை பார்வையிட சென்றார். அப்பகுதிகளில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இடித்து தள்ளும்படி மாநகராட்சி உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சம்பவ பகுதிகளை பார்வையிட்டு கொண்டிருந்த போது தலிபான்கள் திடீரென மேயர் ஹமீதி ‌மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் மேயர் குலாம் ஹெய்தர் ஹமீதி பலியானார். மேலும் இரு குழந்தைகள் இந்த தாக்குதலில் பலியானதாக காந்தஹர் நகர ‌காவல்துறை தலைவர் அப்துல்ரஸாக் செய்தியாளர்களிடம் கூறினார். ஆப்கானிஸ்தானில் கடந்தஇருவாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கப்படைகள் விலக்கிக் கொள்ள முடிவு செய்தது. அன்றிலிருந்து அதிபர் கர்சாயின் சகோதரர் அகமது கர்சாய், (ஜூலை 12) மற்றும் கர்சாயின் அந்தரங்க ஆலோசகர் முகமது கான் (ஜூலை 17) என இரு முக்கிய தலைவர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலியாயினர். தற்போது காந்தஹர் மேயர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களில்மூன்று தலைவர்கள் பலியானது கர்சாயின் அரசியல் நடவடிக்கைக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us