என்.டி.ஆர்., சிலைக்கு மர்ம நபர்கள் தீ :தெ.தேசம் கட்சியினர் சாலை மறியல்
என்.டி.ஆர்., சிலைக்கு மர்ம நபர்கள் தீ :தெ.தேசம் கட்சியினர் சாலை மறியல்
என்.டி.ஆர்., சிலைக்கு மர்ம நபர்கள் தீ :தெ.தேசம் கட்சியினர் சாலை மறியல்
ADDED : அக் 07, 2011 12:02 AM
சித்திப்பேட்டை : தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், மறைந்த ஆந்திர முதல்வருமான என்.டி.ராமராவின் முழு உருவச் சிலையை, மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.
ஆந்திராவில், மெதக் மாவட்டம் சித்திப்பேட்டை அடுத்த மிருதொட்டி கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த என்.டி.ஆரின் சிலைக்கு, மர்ம நபர்கள் கடந்த ஓராண்டுக்கு முன் தீ வைத்தனர். தெலுங்கு தேசம் கட்சியினரால் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதே சிலையை, கடந்த திங்களன்று நள்ளிரவுக்குப் பின், மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால், சிலையின் தலைப் பகுதி, கைகள் எரிந்துபோயின. தகவல் அறிந்த உள்ளூர் தெலுங்கு தேசம் கட்சியினர், சிலைக்கு தீ வைத்தவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டுமென, இப்பகுதியில், நான்கு சாலை சந்திப்பு அருகே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டிருந்த தெலுங்கு தேசம் கட்சியினரிடம், போலீசார் பேச்சு நடத்தினர். சிலைக்கு தீ வைத்தவர்கள் அடையாளம் கண்டு தண்டிக்கப்படுவர் என, போலீசார் உறுதி அளித்ததன் பேரில், தெலுங்கு தேசம் கட்சியினர் கலைந்து சென்றனர்.


