ADDED : செப் 29, 2011 01:44 AM
மதுரை : மதுரை மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் நேற்றுடன் 2659 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஊராட்சி வார்டுகளுக்கு 1732 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டுக்கு 272 பேர், மாவட்ட ஊராட்சி வார்டக்கு 16 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு 39 பேர், நகராட்சி உறுப்பினருக்கு 62 பேர், மாநகராட்சி உறுப்பினருக்கு 147 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 378 பேர், பேரூராட்சி தலைவருக்கு 5 பேர், நகராட்சி தலைவருக்கு 3 பேர், மேயர் வேட்பாளராக 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.