/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காட்டெருமை தாக்கி பலியாகும் குதிரைகள்காட்டெருமை தாக்கி பலியாகும் குதிரைகள்
காட்டெருமை தாக்கி பலியாகும் குதிரைகள்
காட்டெருமை தாக்கி பலியாகும் குதிரைகள்
காட்டெருமை தாக்கி பலியாகும் குதிரைகள்
ADDED : செப் 04, 2011 09:42 PM
தாண்டிக்குடி:தாண்டிக்குடியில் காட்டெருமை தாக்கி குதிரை பலியாகும் சம்பவம்
தொடர்கிறது.தாண்டிக்குடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் இவருக்கு சொந்தமான
குதிரை கரியமால் கோயில் அருகே உள்ள செகுட்டாபட்டி விவசாய தோட்டத்தில்
மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது.அப்பகுதியில் வந்த காட்டெருமை தாக்கியதில்
குடல் சரிந்து அதிரை இறந்தது.
மலைப்பகுதியில் அபரிதமாக பெருகியுள்ள
காட்டெருமை, பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டும், விளை பொருட்கள் எடுத்து
செல்ல பயன்படுத்தப்படும் குதிரைகள் தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து
வருவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.வனத்துறையினர் அமைத்த
சோலார் மின் வேலி பாரமரிப்பின்றி வீணாகியுள்ளது. வனவிலங்குகளால் விவசாயிகள்
அச்சத்துடன் விவசாயம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடரும்
காட்டெருமை தாக்குதலை கட்டுபடுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.


