ADDED : ஆக 07, 2011 02:54 AM
மதுரை:மதுரை விஸ்வநாதபுரம் பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சாந்தம்
அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
தாளாளர் கிருஷ்ணன் தலைமை
வகித்தார். தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் முன்னிலைவகித்தார்.ஏ.கே. போஸ்
எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார். அன்னை தெரசா முதியோர் காப்பக நிர்வாகிகள்
கோபாலகிருஷ்ணன், திருப்பதி, பெரியநாயகம், அம்மா மெஸ் உரிமையாளர் செந்தில்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.