ADDED : செப் 07, 2011 10:19 PM
விழுப்புரம்:வளவனூர் அருகே பெண் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு
பதிந்துள்ளனர்.வளவனூர் அடுத்த நல்லரசன்பேட்டை திருமலை நகரை சேர்ந்த பாபு
மனைவி நந்தினி,35.
இருவருக்கும் 6 வயதில் மோனிசா என்ற பெண் குழந்தை உள்ளது.
பாபு சென்னையில் லாரி டிரை வராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம்
கடைக்கு சென்ற நந்தினி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்ததில்
சேலம் மாவட்டம் வீராஜால் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் நந்தினியை
கடத்தி சென்றது தெரிய வந்தது.புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்
பதிந்து விசாரித்து வருகின்றனர்.


