/உள்ளூர் செய்திகள்/சேலம்/நாட்டுக்கோழிகளுக்கு நோய் தாக்குதல் : பனமரத்துப்பட்டி விவசாயிகள் கவலைநாட்டுக்கோழிகளுக்கு நோய் தாக்குதல் : பனமரத்துப்பட்டி விவசாயிகள் கவலை
நாட்டுக்கோழிகளுக்கு நோய் தாக்குதல் : பனமரத்துப்பட்டி விவசாயிகள் கவலை
நாட்டுக்கோழிகளுக்கு நோய் தாக்குதல் : பனமரத்துப்பட்டி விவசாயிகள் கவலை
நாட்டுக்கோழிகளுக்கு நோய் தாக்குதல் : பனமரத்துப்பட்டி விவசாயிகள் கவலை
ADDED : செப் 06, 2011 01:26 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி பகுதியில் வளர்க்கப்படும்
நாட்டுக்கோழிகள், கழிசல் நோய், காய்ச்சல், சுவாசக் கோளறு உள்ளிட்ட நோய்
தாக்கி இறப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கிராமப் பகுதியில்,
விவசாயத்தை சார்ந்துள்ளவர்கள் திறந்தவெளியில், பராமரிப்பு செலவின்றி
நாட்டுக்கோழி வளர்த்து, கணிசமான வருவாய் ஈட்டுகின்றனர். நாட்டுக்ககோழிகளை
பொதுமக்கள் விரும்பி வாங்குவதால், ஆட்டு இறைச்சி விலைக்கு இணையாக
நாட்டுக்கோழி விலை அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ நாட்டுக்ககோழி கறி, 250
ரூபாய்க்கும், உயிருடன் கிலோ, 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தற்போது,
மழை காலம் என்பதால், நாட்டுக்கோழிகளை கழிச்சல்நோய், காய்ச்சல், சுவாச நோய்
தாக்கி வருகிறது. இதனால், கோழிகள் சொத்து மடிவதால், விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர். பனமரத்துப்பட்டி, கோம்பைக்காடு, திப்பம்பட்டி, அடிக்கரை,
கெஜ்ஜல்நாய்கன்பட்டி, மாக்கனூர், நல்லியாம்புதூர் உள்ளிட்ட பகுதியில்
வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கடந்த சில நாட்களாக நோய் தாக்கி செத்து
மடிகின்றன. மற்ற கோழிகளுக்கும் நோய் பரவி வருவதால், உயிருடன் இருக்கும்
நாட்டுக்கோழிகளை விற்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று,
பனமரத்துப்பட்டி சந்ததைக்கு ஏராளமான நாட்டுக்ககோழிகள் விற்பனைக்கு கொண்டு
வரப்பட்டன. நாட்டு கோழிகள் விற்பனைக்கு குவிந்ததால், விலை சரிவும்
ஏற்பட்டது. உயிருடன் கிலோ, 150 முதல் 170 ரூபாய் வரை விற்பனை
செய்யப்பட்டன. கால்நடை மருந்துவர் ஒருவர் கூறியதாவது: பருவ நிலை
மாற்றத்தால், நாட்டுக்கோழிகளை பல்வேறு நோய்கள் தாக்கி வருகின்றன.
நாட்டுக்கோழிகளுக்கு, பனமரத்துப்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் இலவசமாக
தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டுக்கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி
போட்டுகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


