ADDED : அக் 05, 2011 12:43 AM
தஞ்சாவூர்: தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம்,அமைப்பு சாரா
தொழிலாளர்கள் மத்திய சங்கம், விவசாய தொழிலாளர் கட்சி சார்பில் மாவட்ட
நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடந்தது.தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர்
ஆரோக்கியசாமி தலைமை வகித்தார்.
செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். துணை
செயலாளர் ஜெயபால், பொருளாளர் வில்சன், இளைஞரணி துணைத்தலைவர் ராஜ் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.மாநில கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காசிநாதன், மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஆலோசகர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


