தாம்பரத்தில் பா.ஜ., உண்டியல் குலுக்கல்
தாம்பரத்தில் பா.ஜ., உண்டியல் குலுக்கல்
தாம்பரத்தில் பா.ஜ., உண்டியல் குலுக்கல்
ADDED : ஆக 20, 2011 10:09 PM

தாம்பரம் : இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவும் வகையில், கடந்த 13ம் தேதி முதல், நிதி திரட்டும் பணியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.
தாம்பரம் பா.ஜ., சார்பில், சண்முகம் சாலையில் நிதி திரட்டப்பட்டது. கட்சியின் தமிழக துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கடைதோறும் சென்று உண்டியல் குலுக்கி நிதி திரட்டினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.


