/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முறைகேடு: மினரல் வாட்டர் கம்பெனி மீது புகார்முறைகேடு: மினரல் வாட்டர் கம்பெனி மீது புகார்
முறைகேடு: மினரல் வாட்டர் கம்பெனி மீது புகார்
முறைகேடு: மினரல் வாட்டர் கம்பெனி மீது புகார்
முறைகேடு: மினரல் வாட்டர் கம்பெனி மீது புகார்
ADDED : ஆக 27, 2011 10:57 PM
சிவகங்கை : சிவகங்கை, பிள்ளைவயல் காளியம்மன் கோயில் நகரில், முறைகேடாக நடக்கும் மினரல் வாட்டர் கம்பெனியால், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக, ஆர்.டி.ஓ., துர்க்காமூர்த்தியிடம் புகார் அளித்தனர்.பிள்ளைவயல் காளியம்மன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் கீழ், 75க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள இடத்தில், முறைகேடாக மினரல் வாட்டர் கம்பெனி நடத்துகின்றனர். அதற்காக, நிலத்தடி நீரை, ராட்சச மோட்டார் மூலம் எடுக்கின்றனர். இதனால், மற்ற வீடுகளில் உள்ள ஆழ்துழாய் கிணறுகளில் நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, இங்கு குடியிருப்போர் தண்ணீருக்காக தவிக்கின்றனர். எனவே, முறைகேடாக நடக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, புகார் அளித்தனர்.


