/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முற்போக்கு பெண்கள் கழக வட்ட நிர்வாகிகள் கூட்டம்முற்போக்கு பெண்கள் கழக வட்ட நிர்வாகிகள் கூட்டம்
முற்போக்கு பெண்கள் கழக வட்ட நிர்வாகிகள் கூட்டம்
முற்போக்கு பெண்கள் கழக வட்ட நிர்வாகிகள் கூட்டம்
முற்போக்கு பெண்கள் கழக வட்ட நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஆக 18, 2011 12:47 AM
செஞ்சி : அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக வட்ட நிர்வாகிகள் கூட்டம் மேல்ஒலக்கூரில் நடந்தது.
இ.கம்யூ., (எம்.எல்), அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகியவற்றின் செஞ்சி வட்ட நிர்வாகிகள் கூட்டம் மேல்ஒலக்கூர் கிராமத்தில் நடந்தது. பெண்கள் கழக மாவட்ட தலைவர் சுசிலா தலைமை தாங்கினார். இ.கம்யூ., (எம்.எல்) மாவட்ட செய லாளர் வெங்கடேசன் சிறப்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் பேபி, சக்தி, ஜோதி, பச்சம்மாள் பானு, தனம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண் டும். வேலை உறுதி திட்டத்தில் 119 ரூபாய் கூலியை முழுமையாக வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்களை சிறு, குறு விவசாயிகள், கிராம, நகர்ப்புற தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


