சக்சேனா மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
சக்சேனா மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
சக்சேனா மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
சென்னை:சன்,'பிக்சர்ஸ்' சக்சேனா தொடர்பான மீதமுள்ள வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், தயாரிக்கப்பட்ட பெரும்பாலான படங்கள், சன்,'பிக்சர்ஸ்' நிறுவனத்தால் வாங்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன.
குறிப்பாக, சக்சேனா, ஐயப்பன் இருவரும் சேர்ந்து, தர வேண்டிய பணத்தை கேட்கச் சென்றபோது மிரட்டியதாக புகார்கள் அதிகளவில் வந்தன.இவற்றில், சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ், சண்முகவேல் ஆகிய இருவர் கொடுத்த புகார்களில், இரு தரப்பும் Œமாதானமாகி, பணம் செட்டில்மென்ட் ஆகிவிட்ட காரணத்தால், கோர்ட்டில் ரத்து செய்யப்பட்டது.
இது தவிர, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஹித்தேஷ் ஜபக், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அருள்மூர்த்தி மற்றும், 'முத்துக்கு முத்தாக' படத்தின் இயக்குனர் ரா” மதுரவன் ஆகி@யார் கொடுத்த புகார்கள் மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளையும் ரத்து செய்யும்படி, கோர்ட்டில் சக்சேனா மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், சக்சேனா மீதான வழக்குகள் அனைத்தையும், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற காவல்துறை தலைமை முடிவெடுத்து, மாற்றும் நடவடிக்கைகளை @மற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூடிய விரைவில், @காப்புகள் கைமாறும் எனத் தெரிகிறது.