/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உள்ளாட்சி தேர்தல் வார்டு அலுவலகம் திறந்த தி.மு.க., கவுன்சிலர்கள்உள்ளாட்சி தேர்தல் வார்டு அலுவலகம் திறந்த தி.மு.க., கவுன்சிலர்கள்
உள்ளாட்சி தேர்தல் வார்டு அலுவலகம் திறந்த தி.மு.க., கவுன்சிலர்கள்
உள்ளாட்சி தேர்தல் வார்டு அலுவலகம் திறந்த தி.மு.க., கவுன்சிலர்கள்
உள்ளாட்சி தேர்தல் வார்டு அலுவலகம் திறந்த தி.மு.க., கவுன்சிலர்கள்
ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் வருவதால், வார்டுகளில் அலுவலகம் திறந்து, மக்களுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றும் பணியில், ஈரோடு மாநகராட்சி, தி.மு.க., கவுன்சிலர்கள் மும்முரமாகியுள்ளனர்.
ஈரோடு மாநகரில் நேதாஜி மார்க்கெட் காய்கறிகடைகள், வணிக வளாகம், மாநகராட்சி மகப்பேறு மையம், பஸ் ஸ்டாண்டு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், பஸ் ஸ்டாண்டு விரிவாக்கம், பி.பி. அக்ரஹாரம், வைராபாளையம், காரைவாய்க்கால் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பம்பிங் ஸ்டேஷன், வ.உ.சி., பூங்கா விரிவாக்க பணி... ஆகிய அனைத்தும், கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் இருக்கும் கட்டிடங்கள். இவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால், தங்கள் வார்டுகளில் பூட்டி வைத்திருந்த அலுவலகங்களை, தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் திறந்து வருகின்றனர். வார்டு அலுவலகத்துக்கு தினமும் சென்று, அங்கு நடக்கும் பணிகளை ஆய்வு செய்கின்றனர். ஏற்கனவே துவக்கி, சுணங்கியுள்ள வளர்ச்சிப் பணிகளை, செப்டம்பர் 15ம் தேதிக்கு முன் முடிக்க, தி.மு.க., மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. புதிதாக மின்விளக்குகள், குடிநீர் இணைப்பு, குடிநீர் தொட்டிகள் அமைக்க முயற்சி செய்கின்றனர். சாக்கடைகள், ரோடு பணிகளை விரைந்து முடிக்க, இரவு பகலாக பணி நடக்கிறது. தவிர, பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தரவும், விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர். இப்பணிகள் செய்வதற்காக காலையில் இருந்து, நள்ளிரவு வரையிலும், கவுன்சிலர்கள் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையான மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் வரும் 15ம் தேதி பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதற்கு மத்தியில் தி.மு.க.,வினரின் இப்பணிகள் தாக்குப்பிடிக்குமா என்பது, உள்ளாட்சி தேர்தலின் போதுதான் தெரிய வரும்.


