ADDED : ஆக 03, 2011 10:45 PM
ஊட்டி : ஊட்டி அருகே கப்பத்தொரை கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சம்மா(80).
இவர் நேற்று முன்தினம் காலை சாலையில் வந்து கொண்டிருந்த போது ரிவர்சில் வந்த லாரி நஞ்சம்மா மீது மோதியது. இதில் நஞ்சம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஊட்டி ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


