வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்
வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்
வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்
ADDED : ஆக 30, 2011 12:19 PM
வால்பாறை: வால்பாறையில் காட்டுயானைகள் பள்ளிக்கட்டடத்தை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சக்தி எஸ்டேட்டில் நேற்றிரவு 5 காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள துவக்க பள்ளி கட்டடத்தை சேதப்படுத்தின. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பீதியடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை விரட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.


