/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழில்நுட்ப தேர்வு விண்ணப்பம் விநியோகம்தொழில்நுட்ப தேர்வு விண்ணப்பம் விநியோகம்
தொழில்நுட்ப தேர்வு விண்ணப்பம் விநியோகம்
தொழில்நுட்ப தேர்வு விண்ணப்பம் விநியோகம்
தொழில்நுட்ப தேர்வு விண்ணப்பம் விநியோகம்
ADDED : ஆக 03, 2011 01:30 AM
புதுச்சேரி : தமிழ்நாடு அரசு தொழில்நுட்பத் தேர்விற்கான விண்ணங்கள் காமராஜர் கல்வி வளாகத்தில் வழங்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர் அனுமந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் தமிழ்நாடு அரசு தொழில்நுட்பத் தேர்விற்கான விண்ணங்கள் புதுச்சேரி, காமராஜர் கல்வி வளாகம், நான்காவது மாடியில் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் 2ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. தேர்வு கட்டணம் 'நடனம்' கீழ் நிலை 57 ரூபாய், மேல்நிலை 62 ரூபாய். 'இந்திய இசை கூடுதல் செயல்முறை' கீழ் நிலை 27 ரூபாய், மேல்நிலை 37 ரூபாய், ஏனைய பாடங்களுக்கு கீழ் நிலை 37 ரூபாய், மேல்நிலை 47 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்விற்கான கட்டணத்தை கருவூல ரசீதாக மட்டுமே செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 'கூடுதல் செயலாளர் (தொழில் நுட்பத் தேர்வு), அரசு தேர்வுகள் இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு வரும் 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு 2207286 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.