/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/தே.மு.தி.க., வேட்பாளர் லாடபுரம் கிராமத்தில் தீவிர ஓட்டு சேகரிப்புதே.மு.தி.க., வேட்பாளர் லாடபுரம் கிராமத்தில் தீவிர ஓட்டு சேகரிப்பு
தே.மு.தி.க., வேட்பாளர் லாடபுரம் கிராமத்தில் தீவிர ஓட்டு சேகரிப்பு
தே.மு.தி.க., வேட்பாளர் லாடபுரம் கிராமத்தில் தீவிர ஓட்டு சேகரிப்பு
தே.மு.தி.க., வேட்பாளர் லாடபுரம் கிராமத்தில் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : அக் 06, 2011 03:37 AM
பெரம்பலூர்: லாடபுரம் மற்றும் அம்மாபாளையம் கிராமத்தில் நேற்று மாலை
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஓட்டு சேகரித்த தே.மு.தி.க., வேட்பாளர்
வாசு ரவிக்கு வாக்காளர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
பெரம்பலூர் மேற்கு மாவட்ட பஞ்சாயத்து 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு
தே.மு.தி.க., பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் வாசு ரவி போட்டியிடுகிறார். இவர்
நேற்று லாடபுரம் மற்றும் அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள அனைத்து
வீடுகளுக்கும் நடந்தே சென்று ஓட்டு கேட்டார். அப்போது பட்டாசு வெடித்தும்,
பெண்கள் ஆரத்தி எடுத்தும் இவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் துரை காமராஜ், மாவட்ட துணை
செயலாளர் கண்ணுசாமி, மாவட்ட பொருளாளர் சீனி வெங்கடேசன், தேர்தல்
பொறுப்பாளர் சின்னசாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜோதி லட்சுமி, வக்கீல்
அணி மாவட்ட செயலாளர் சேதுபதி, ஒன்றிய துணை செயலாளர்கள் சுரேஷ்,
கலைச்செல்வன், வக்கீல் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெடுவாசல்
ரவிக்குமார், தொண்டரணி வீராசாமி, நிர்வாகிகள் ரெங்கசாமி, கந்தசாமி, துரை,
மகளிரணி நிர்வாகிகள் பாப்பா, சுதா உட்பட பலர் பங்கேற்றனர்.


