/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/திருச்செந்தூரில் அதிமுக., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்திருச்செந்தூரில் அதிமுக., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
திருச்செந்தூரில் அதிமுக., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
திருச்செந்தூரில் அதிமுக., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
திருச்செந்தூரில் அதிமுக., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
ADDED : அக் 08, 2011 01:48 AM
திருந்செந்தூர் : திருச்செந்தூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் சண்முகநாதன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தாமோதரன், இணைச் செயலாளர் கணேசன், முன்னாள் எம்எல்ஏ.,செல்லத்துரை, மாவட்ட விவசாய அணி அக்சிபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் விசாகன், திருச்செந்தூர் யூனியன் கவுன்சிலர் வேட்பாளர்கள் கண்ணன், ஹேமலதா, சந்திரா, தங்கரெத்தினம், வேதவல்லி, டவுன் பஞ்.,தலைவர் வேட்பாளர்கள் சுரேஷ்பாபு (திருச்செந்தூர்), கனகராஜ் (ஆறுமுகநேரி), மாதவசிங் (கானம்), காயல்பட்டணம் நகராட்சி கவுன்சிலர்கள் மனோகரன், சுயம்பு மற்றும் டவுன் பஞ்.,களில் போட்டியிடும் அதிமுக.,கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் சண்முகநாதன் பேசியதாவது, இந்தியாவின் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் அமைய கட்சி தொண்டர்கள் அனைத்து வேட்பாளர்களையும், வெற்றி பெற வைக்க ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். நமக்கு வேட்பாளர் சீட்டு கிடைக்கவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். உழைக்கும் ஒவ்வொரு தொண்டரின் பெயரும் முதல்வருக்கு தெரியும். காசு பணத்திற்காக முதல்வர் ஜெயலலிதா ஒரு போதும் சீட்டு வழங்குவதில்லை. எனவே உங்களுக்கும் நாளை வாய்ப்பு வரும். எனவே கடுமையாக உழைத்து நமது ஒவ்வொரு வேட்பாளரையும் வெற்றி பெற செய்யுங்கள். உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற பாடுபடுவோம் இவ்வாறு பேசினர்.இந்த கூட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தலிபா, நகர அம்மா பேரவை செயலாளர் கோட்டை மணிகண்டன், வக்கீல் முகமது உவைஸ், நகர இளம்பெண்கள் இளைஞர் பாசறை செயலாளர் வினோத், ஒன்றிய அவைத்தலைவர் ஜெஸ்லர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர் ஐக்கோட்துரை, தொகுதி இணைச் செயலாளர் ராஜாநேரு, வெங்குசுந்தரபாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில், வக்கீல் ரவி, மாவட்ட பிரதிநிதி பஷீர் உட்பட ஏராளமான தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். நிறைவில் நகர செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.


