ADDED : ஜூலை 27, 2011 11:16 PM
குறிஞ்சிப்பாடி : வடலூர் ஆர்.சி., காலனியில் மின் கசிவால் குடிசை வீடு எரித்து சாம்பலானது.வடலூர் ஆர்.சி., காலனியைச் சேர்ந்தவர் ராயப்பன் மனைவி அன்னேஸ், 45; இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றிருந்தார்.காலை காற்று பலமாக விசியதால் வீட்டின் மேல் இருந்த சர்வீஸ் ஒயரில் மின் கசிவு ஏற்ப்பட்டு வீடு தீப்பிடித்தது.தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய பெறுப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.இவ்விபத்தில் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பெருட்கள் எரித்து சாம்பலானது.