/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வழிப்பறி கொள்ளையன் கைது 10 சவரன் நகைகள் மீட்புவழிப்பறி கொள்ளையன் கைது 10 சவரன் நகைகள் மீட்பு
வழிப்பறி கொள்ளையன் கைது 10 சவரன் நகைகள் மீட்பு
வழிப்பறி கொள்ளையன் கைது 10 சவரன் நகைகள் மீட்பு
வழிப்பறி கொள்ளையன் கைது 10 சவரன் நகைகள் மீட்பு
ADDED : செப் 14, 2011 02:57 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில், தனியாக செல்லும் பெண்களிடம் வழிப்பறியில்
ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை
வழிமறித்து, அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயின்கள் பறிக்கும்
சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து வழிப்பறி கொள்ளையனை பிடிக்க,
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் தயாளன், எஸ்.ஐ., தயாநிதி ஆகியோர் அடங்கிய
தனிப்படை அமைக்கப்பட்டது.இவர்கள் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே,
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த, பெரும்பாக்கம்
கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் மகேந்திரன், 32 என்பவரை பிடித்து
விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ராஜாஜிபுரம், புகழேந்தி நகர், சம்பத்
நகர், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம்
வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.மேலும், அவரிடமிருந்து, 10 சவரன் தங்க
செயின்களையும் மீட்டனர். இதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய். இதையடுத்து
திருவள்ளூர் டவுன் போலீசார், மகேந்திரனை கைது செய்து, திருவள்ளூர்
கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.