ADDED : செப் 13, 2011 12:34 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வித் துறை சார்பில், பல்கலை மானியக் குழு நிதியுதவியின் கீழ் கொடைக்கானலில் மலையேற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது.பல்கலை மாணவர்கள் 30 பேர், பத்து நாட்கள் இம்முகாமில் பங்கேற்றனர்.
மலையேற்றப் பயிற்சி, நடைபயிற்சி மூலம் குறிஞ்சியாண்டவர் கோயில், வில்லுப்பட்டி, பைன் காடுகள், தூண்பாறைகள், வட்டக்கானல் அருவிகளை சுற்றி பார்த்தனர். நிறைவு விழாவில் பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கணேசன், குணசேகரன், உடற்கல்வி துறைத் தலைவர் சந்திரசேகரன், பேராசிரியர்கள் ஜெயவீரபாண்டியன், ரமேஷ் பங்கேற்றனர்.


