ADDED : செப் 28, 2011 01:19 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகள் இருந்தன.
தற்போது புறநகர்
பகுதியை சேர்த்து 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டன. இதில், நகர்
போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட 72 வார்டுகளில், வேட்பாளர்கள் யார்,
ஏற்கனவே அந்த வார்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதா போன்றவை
கணக்கிட்டு 552 'பூத்'கள் பதட்டமானவை என கண்டறிந்துள்ளனர். புறநகரில்
முதற்கட்டமாக 164 'பூத்'களை பதட்டமானவையாக தேர்வு செய்துள்ளனர். இங்கு
கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷனிடம் கமிஷனர்
கண்ணப்பனும், மாவட்ட எஸ்.பி., ஆஸ்ராகர்க்கும் ஆலோசிக்க உள்ளனர்.