திருச்சியில் அமைச்சர் கார் திடீர் சோதனை போலீசார் "அதிரடி'
திருச்சியில் அமைச்சர் கார் திடீர் சோதனை போலீசார் "அதிரடி'
திருச்சியில் அமைச்சர் கார் திடீர் சோதனை போலீசார் "அதிரடி'
ADDED : அக் 07, 2011 03:22 AM
திருச்சி : திருச்சி கருமண்டபம் சோதனைச் சாவடியில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் காரை, போலீசார் சோதனையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கவுள்ளதால், மாநகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
அதன்படி, திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள கருமண்டபம் சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று காலை, 11 மணியளவில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் வாகனங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக அமைச்சர் உதயகுமார் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட முயன்றனர். காரில் இருந்தவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாருடைய கார் என தெரிவித்துள்ளனர். ஆயினும் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ., சில்வர்ஸ்டர் காரை சோதித்த பிறகே செல்ல அனுமதித்துள்ளார். இச்சம்பவம் அ.தி.மு.க.,வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


