/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கனவு நிறைவேறியது; ஆதிவாசிகள் கொண்டாட்டம்கனவு நிறைவேறியது; ஆதிவாசிகள் கொண்டாட்டம்
கனவு நிறைவேறியது; ஆதிவாசிகள் கொண்டாட்டம்
கனவு நிறைவேறியது; ஆதிவாசிகள் கொண்டாட்டம்
கனவு நிறைவேறியது; ஆதிவாசிகள் கொண்டாட்டம்
ADDED : ஆக 28, 2011 11:48 PM
பெ.நா.பாளையம் : 'மலை கிராமத்துக்கு சாலை, பஸ் வசதி வேண்டும்' என்ற பாலமலை
ஆதிவாசிகளின் கனவு நிறைவேறியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு
தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலைச் சுற்றி
பெரும்பதி, பெருக்குபதி, குஞ்சூர்பதி, மாங்குழி, பசுமணி, பசுமணிபுதூர்
உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசிகள்
வசிக்கின்றனர். இங்குள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு பக்தர்கள் வந்து
செல்லவும், ஆதிவாசிகள் தங்களுடைய கிராமங்களுக்கு செல்லவும் தார் சாலை, பஸ்
வசதி செய்து தர வேண்டுமென ஆதிவாசிகள் 60 ஆண்டுகாலமாக கோரி வந்தனர். கடந்த 2
ஆண்டுகளுக்கு முன் பிரதமரின் கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தில் ஒரு கோடி
ரூபாய் செலவில் பாலமலை அடிவாரத்திலிருந்து பாலமலை கோவில் வரை தார்சாலை
அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, 'பஸ் வசதியும் செய்து தர
வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்தது. இதை தொடர்ந்து பாலமலையில் இருந்து
பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் வரை காலை மற்றும் மாலை நேரங்களில்
தலா 2 முறை பஸ் வந்து செல்லும் புதிய வழித்தட துவக்க விழா கோவனூõரில்
நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் அருண்குமார் தலைமை
வகித்தார். புதிய வழித்தடத்தை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி
துவக்கி வைத்தார். புதிய பஸ் தினமும் காலை 6.10 மணிக்கு காரமடையில் இருந்து
புறப்பட்டு, பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தை 6.45 மணிக்கு
வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு, காலை 7.35 மணிக்கு பாலமலையை அடையும்
பஸ், பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தை காலை 8.30 மணிக்கு மீண்டும்
சென்றடையும். அங்கிருந்து ஊட்டிக்கு புறப்படும் பஸ், மீண்டும் மாலை 4.30
மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்துக்கு வரும். அங்கிருந்து
பாலமலை புறப்படும் பஸ், மீண்டும் பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தை
6.20 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும்
பாலமலை புறப்பட்டு செல்லும். பஸ் வசதி தொடங்கப்பட்டதால், 60 ஆண்டாக
கோரிக்கை விடுத்து வந்த ஆதிவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.துவக்க விழா
நிகழ்ச்சியில், ஒன்றிய முன்னாள் தலைவர் கோவனூர் துரைசாமி, போக்குவரத்து கழக
கோட்ட மேலாளர் தங்கவேலு, வர்த்தக மேலாளர் ஸ்டீபன், கிளை மேலாளர் ரவி
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


