/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் புதிய நகராட்சி கட்டிடத்தில் அமர போவது யார்?கரூர் புதிய நகராட்சி கட்டிடத்தில் அமர போவது யார்?
கரூர் புதிய நகராட்சி கட்டிடத்தில் அமர போவது யார்?
கரூர் புதிய நகராட்சி கட்டிடத்தில் அமர போவது யார்?
கரூர் புதிய நகராட்சி கட்டிடத்தில் அமர போவது யார்?
ADDED : அக் 12, 2011 11:36 PM
கரூர்: 'ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கரூர் புதிய நகராட்சி கட்டிடத்தின் தலைவர் சீட்டில் அமர போகும் புதிய கரூர் பெரு நகராட்சி தலைவர் யார் என்பதை வரும் 21ம் தேதி கரூர் நகர வாக்காளர்கள் முடிவு செய்ய உள்ளனர்.கடந்த 1926 ம் ஆண்டு முதல் கரூர் நகராட்சி கூட்டம் பெத்தாச்சி கட்டிடத்தில் நடந்து வந்தது.
இதையடுத்து கடந்த தி.மு.க., ஆட்சியில் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை, கடந்தாண்டு டிசம்பர் மாதம் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை இழந்தது.பின்னர் புதிய கட்டிடத்தை தி.மு.க.,வை சேர்ந்த கரூர் நகராட்சி தலைவர் சிவகாம சுந்தரி உள்ளிட்ட தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கலெக்டர் ÷ஷாபனா வரை கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் உள்ளூர் அரசியல் காரணங்களால் புதிய நகராட்சி கட்டிடம் திறக்கப்படவில்லை.'மின் ஒயரிங் உள்ளிட்ட பல பணிகள் இருப்பதால், முடிந்தவுடன் திறக்கப்படும்' என கமிஷனர் ரவிச்சந்திரன் நகராட்சி கூட்டத்தில் தெரிவித்து வந்தார். இதனால் அதிருப்தியடைந்த தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி உள்பட தி.மு.க., கவுன்சிலர்கள் பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தனர்.இந்த நிலையில் கரூர் நகராட்சிக்கு வரும் 17ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் அறிவிக்கப்பட்டது. தற்போது இறுதி கட்ட பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. 21ம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு, வரும் 25ம் தேதி தேர்வு செய்யப்படும் புதிய நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பதவியேற்று கொள்ள வேண்டும்' என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனால் உள்ளூர் அரசியல் காரணங்களாக பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்த கரூர் நகராட்சியின் புதிய கட்டிடத்தில் தற்போது இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டொரு நாளில் பணிகள் முடிந்து விடும் என தெரிகிறது.கரூர் நகராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதிய கட்டிடத்தில் கம்பீரமாக அமர தயக்கம் காட்ட மாட்டார்கள் என தெரிகிறது.ஆனால், அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெறும் பட்சத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டு, அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தில் அமருவரா? அல்லது முதல்வர் ஜெயலலிதா, புதிய சட்டசபைக்கு செல்லாமல், பழைய செயின்ட்ஜார்ஜ் கோட்டைக்கு சென்றதை பின்பற்றி, பழைய பெத்தாச்சி கட்டிடத்தில் அமருவரா? என்பது வரும் 25 ம் தேதி தெரியவரும்.


