Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலத்தில் "கொழு கொழு' குழந்தை போட்டி : தென்காசி குழந்தை முதலிடம்

குற்றாலத்தில் "கொழு கொழு' குழந்தை போட்டி : தென்காசி குழந்தை முதலிடம்

குற்றாலத்தில் "கொழு கொழு' குழந்தை போட்டி : தென்காசி குழந்தை முதலிடம்

குற்றாலத்தில் "கொழு கொழு' குழந்தை போட்டி : தென்காசி குழந்தை முதலிடம்

ADDED : ஜூலை 28, 2011 01:47 AM


Google News

குற்றாலம் : குற்றாலத்தில் நடந்த சாரல் திருவிழாவில் 'கொழு கொழு' குழந்தைகள் போட்டியில் தென்காசி குழந்தை முதலிடம் பெற்றது.குற்றாலம் சாரல் திருவிழாவின் ஐந்தாவது நாளான நேற்று 'கொழு கொழு' குழந்தைகள் போட்டி மற்றும் ஆடை அலங்கார போட்டி நடந்தது.

கலைவாணர் கலையரங்கில் நடந்த இப்போட்டியில் 18 குழந்தைகளும், அவர்களது பெற்றோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் திட்ட அலுவலர் ஆனந்தவள்ளி தலைமை வகித்தார். குற்றாலம் இன்ஸ்பெக்டர் குமாரவேல் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.



போட்டியில் தென்காசியை சேர்ந்த சுதா, மாரியப்பன் தம்பதியினரின் குழந்தை சக்தி (எ) அகஸ்தியா முதலிடமும், செங்கோட்டையை சேர்ந்த ராதாலட்சுமி, ராம்ராஜ் தம்பதியினரின் மகன் ராமசுந்தரமூர்த்தி இரண்டாமிடமும், கீழப்புலியூரை சேர்ந்த சுமதி, கணேசன் தப்பதியினரின் மகள் தமிழ்செல்வி மூன்றாமிடமும் பெற்றனர்.பின் குற்றாலம் பாரத் மாண்டிச்சோரி பள்ளி மாணவ, மாணவிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் அணியும் ஆடைகளை அணிந்து வந்த ஆடை அலங்கார போட்டி நடந்தது. தொடர்ந்து ஊட்டச்சத்து ஊழியர்களின் பரத நாட்டியம், கோலாட்ட போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டியின் நடுவர்களாக தென்காசி எல்.ஐ.சி. ஹெச்.சி.ஏ. மலர்விழி, குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி உதவி பேராசிரியை அனுஜா செயல்பட்டனர்.இரவில் நடந்த விழாவில் 'கொழு கொழு' குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், உடையலங்கார போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏ.பி.ஆர்.ஓ.நவாஸ்கான் உதவியாளர் இளங்கோ, கங்காதரன் செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us