/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அப்பாடா கொஞ்சம் நிம்மதி தங்கம் பவுனுக்கு ரூ.1,360 குறைந்ததுஅப்பாடா கொஞ்சம் நிம்மதி தங்கம் பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது
அப்பாடா கொஞ்சம் நிம்மதி தங்கம் பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது
அப்பாடா கொஞ்சம் நிம்மதி தங்கம் பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது
அப்பாடா கொஞ்சம் நிம்மதி தங்கம் பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது
ADDED : ஆக 25, 2011 11:28 PM
கோவை :தங்கம் விலை நேற்று பவுனுக்கு 1,360 ரூபாய் குறைந்து, பொதுமக்களை
சற்று ஆசுவாசப்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த வார இறுதியில் ஒரு பவுன்
21 ஆயிரத்து 32 ரூபாயாக உயர்ந்து, பொதுமக்கள் மற்றும் தங்க நகை
விற்பனையாளர்களை அதிர்ச்சிக்குள் ளாக்கியது. விசேஷ காலத்தை ஒட்டி, தங்க நகை
விற்பனையா ளர்கள் தங்கள் ÷ஷாரூம்களில் ஏராளமான டிசைன்களில் அதிகப்படியான
நகைகளை இருப்பில் வைத்திருந்தனர்; இந்த அதிரடி விலையேற்றத்தால் விற்பனை
பாதித்து சிக்கலில் தவித்தனர். இந்நிலையில், ஆக., 22ம் தேதி 21 ஆயிரத்து 40
ரூபாயாக இருந்த ஒரு பவுன் தங்கம், 23ம் தேதி சற்று குறைந்து 20 ஆயிரத்து
792 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில், கோவையில் நேற்று ஒரு கிராம் தங்கம்
2,429 ரூபாயாகவும், ஒரு பவுன் 19 ஆயிரத்து 432 ரூபாயாகவும் விற்பனையானது;
நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு 1,360 குறைந்து பொதுமக்கள் மற்றும்
விற்பனையாளர்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது. கோவை தங்க நகை வியாபாரிகள்
சங்க செயலாளர் சபரிநாத் கூறுகையில்,''ஒரு பொருளின் மேல் அதிக மோகம்
கொள்ளும்போது அந்த பொருளை அதிகளவில் வாங்கி வைப்பது வழக்கமான ஒன்று. அதே
பொருளை அடிக்கடி வாங்கும்போது அதன் மீதான மோகம் சற்று குறைவதும் இயற்கையான
ஒன்றுதான். தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளதற்கும் இதுதான் காரணம்.
''தங்கத்தின் விலை நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவில் உயர்ந்து இறங்குவது
வாடிக்கை. ஆனால், கடந்த சில வாரங்களில் சராசரி ஏற்ற இறக்கத்தைவிட 30
சதவீதம் உடனடியாக அதிகரித்துவிட்டது. இதில் இருந்து இன்று(நேற்று)
ஒரேநாளில், 10 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது; இன்னும் 20 சதவீத விலை
ஏற்றம் அப்படியேதான் உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு விலை சற்று ஏறி
அதன்பின் இறங்கும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.


