Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தகடலோர மக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தகடலோர மக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தகடலோர மக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தகடலோர மக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை

ADDED : ஜூலை 30, 2011 01:07 AM


Google News
தூத்துக்குடி:மீனவர்களின் ஜனநாயக உரிமையை தட்டி பறிக்கும் வகையில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தாமல் தட்டி கழித்து வருவதாக கடலோரமக்கள் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் நடக்க வேண்டிய மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இதுவரையிலும் நடத்தப்படவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையும் வேண்டுமென்றே சாக்கு போக்கு சொல்லி திட்டமிட்டே தள்ளிப்போட்டு வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்ந்து மூன்று மாதங்களாக நடந்து வருகிறது. அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் மாதம் தவறாமல் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்பகுதி கடலோர மாவட்டங்களை பார்வையிட வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் தூத்துக்குடி மாநகரத்திற்கு வந்தும் கூட இறந்து போன நான்கு மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வரவில்லை.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பாலுவையும் சந்திக்க வரவில்லை. அவருக்கு எந்த நிவாரணமும் இல்லை.இறந்து போன சக மீனவர்களுக்கு இரங்கல் தெரிவித்த விசைப்படகு மீனவர்களை மீண்டும் கடலில் மீன் பிடிக்க செல்ல நடவடிக்கை எடுக்காமல், அவர்களின் உழைப்பை பறிக்கும் செயல்பாடுகளை வேடிக்கை பார்த்தது கண்டனத்திற்குரியது. பட்டிணமருதூர் கடல் பகுதியில் ராட்சச குழாய்கள் அமைத்தல், கடலில் ஆழ்துளை கிணறு அமைத்தல், கடலில் தூர்வாறும், ஆழப்படுத்தும் கப்பல் போன்றவற்றை நிறுத்தி பல சட்ட விரோதமான செயல்களை மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் அரங்கேற்றி வருகிறது. தனியார் அனல்மின் நிலைய கம்பெனியோ தங்களின் சுய நலன்களுக்காக மீனவ கிராமங்களை பிளவுபடுத்தி வருகிறது. இந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்து மாவட்ட மீன்வளத்துறைக்கும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கும், தமிழக மீன்வளத்துறை செயலாளருக்கும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் பல தடவைகள் மனுக்கள் கொடுத்தும் இன்றுவரை எந்த பதிலும், நடவடிக்கையும் இல்லை. மேற்கண்ட மாபெரும் சிக்கல்களை, அநீதிகளை, குறைபாடுகளை எடுத்துச் சொல்வதற்கு மீனவர்களுக்கு இருந்த ஒரே வடிகால் மீனவர் குறை தீர்க்கும் நாள் தான். இந்த ஒரு ஜனநாயக உரிமையை கூட மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையும் தட்டிபறிக்க நினைக்கிறது. மீனவர்களின் குறைகளை போக்க உடனே மாவட்ட நிர்வாகம் மாதந்தோறும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us